எங்களை பற்றி

எங்கள் மையத்தைப் பற்றி

பழநி பாலாஜி கருத்தரித்தல் மையம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற IVF மையமான பழநி பாலாஜி கருத்தரித்தல் மையம், சென்னை, மதுரை மற்றும் பழனியை தளமாக கொண்டு இயங்கி வருகிறது.

1993ல் பழனியில் தொடங்கப்பட்ட பழநி பாலாஜி கருத்தரிப்பு மையம், மேம்பட்ட சர்வதேச சிகிச்சைகளான In Vitro Fertilization (IVF) மற்றும் ICSI சிகிச்சை முறைகளை சிறப்பாக செய்து வருகிறது.

எங்கள் பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில், சிகிச்சை பெறுபவர்களுக்கு தனி அக்கறையுடன் கூடிய கவனிப்பும், நோய் தீர்வுக்கான தொடர் சிகிச்சையையும் குறைந்த செலவில் வழங்குவதையே குறிக்கோளாக கொண்டுள்ளோம்.

உங்கள் குடும்ப வாழ்க்கை குழந்தைச் செல்வத்தோடு மகிழ்ச்சிகரமானதாக அமைய எங்கள் மேம்பட்ட தரத்தை, கருத்தரிப்பு சிகிச்சைகளில் மிகுந்த அனுபவமும், அர்ப்பணிப்பும் கொண்ட மருத்துவக் குழு மூலமும், கனிவான அக்கறையின் மூலமும் உறுதி செய்கின்றோம்.

பழநி பாலாஜி கருத்தரித்தல் மையம், தனது மேம்பட்ட மகளிர் நோய் என்டோஸ்கோபி அறுவை சிகிச்சைகளுக்காக (advanced gynaecological endoscopic surgeries) புகழ்பெற்றது.

  Laparoscopy - Diagnosis & Management
  (லேப்ராஸ்கோப்பி – டையக்னாஸிஸ் & மேனேஜ்மென்ட்)
 • Fibroid (Myomectomy)
  (ஃபைப்ராய்ட் – மையோமெக்டமி )
 • Chocolate Cyst – Endometriosis ( Cystectomy)
  (சாக்லேட் சிஸ்ட் – என்டோமெட்ரியோஸிஸ் (சிஸ்டெக்டமி))
 • PCOD (Laproscopic Ovarian Drilling – LOD) PCOD
  (லேப்ராஸ்கோப்பிக் ஓவரியன் டரில்லிங்)
 • Ovarian Cyst (Ovarian Cystectomy)
  (ஓவேரியன் சிஸ்ட் (ஓவேரியன் சிஸ்டெக்டமி))
 • Adenomyosis (Metroplasty)
  (அடினோமையோஸிஸ் (மெட்ரோப்ளாஸ்டி))
  Hysteroscopy
  (ஹிஸ்ட்ரோஸ்கோப்பி)
 • Uterine Septum: Partial or Total (Septal Resection)
  யூடீரைன் செப்டம் – பார்ஷியல் or டோட்டல் (செப்டல் ரிஸெக்க்ஷன்)
 • Uterine Polyp (Polypectomy)
  (யூடீரைன் பாலிப் (பாலிபெக்டமி))
 • Submucous Fibroid (Submucous Fibroid Resection)
  (சப்மியூகஸ் ஃபைப்ராய்ட் (சப்மியூகஸ் ஃபப்ராய்ட் ரிஸெக்க்ஷன்))

பழநி பாலாஜி கருத்தரித்தல் மையம், மீண்டும் மீண்டும் அபார்ஷன் காரணமாக குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கிறது. இதை Recurrent Pregnancy Loss (RPL) என்று குறிப்பிடுவர். இது மட்டுமின்றி High Risk Pregnancy Care லும், பழநி பாலாஜி முதலிடம் வகிக்கின்றது. High Risk Pregnancy க்கு உட்பட்டவர்கள் யார் என்றால்

எங்கள் நோக்கம்

அதிக வெற்றி வாய்ப்புள்ள உலகத் தரமிக்க கருத்தரிப்பு சிகிச்சை மற்றும் டெஸ்ட் டியூப் குழந்தைக்கான சிகிச்சையை குறைந்த செலவில் வழங்குவது.

எங்கள் பலம்

மருத்துவ நிபுணர்கள் குழு

ஆண், பெண் கருத்தரிப்பு சிகிச்சை வழங்க எங்களிடம் கைதேர்ந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள்.

தனி அக்கறையுடன் கூடிய கவனிப்பு

சௌகரியம்.

கருத்தரிப்பு சிகிச்சை தொடங்கி, கர்ப்ப கால கவனிப்பு மற்றும் மகப்பேறு வரை எங்களோடேயே தங்கியிருக்க எல்லா சௌகரியங்களும் செய்து தரப்படும்.

அவர்களின் தேவைக்கேற்ப.

Personalized Care

Cost Effective

Convenience

எங்கள் பண்பு

 • Excellence (மேன்மை)
 • Dedication (அர்ப்பணிப்பு)
 • Human Care (கரிசனையான கவனிப்பு)

எங்கள் குறிக்கோள்

உங்கள் தேவைகளை புரிந்து கொண்டு செயலாற்றுவதே எங்கள் குறிக்கோளாக வைத்துள்ளோம்.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் மன உழைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம், அதனால் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, அவர்களோடு அக்கறையுடன் உரையாடுவது, தனி அக்கறையுடன் கூடிய கவனிப்பு மற்றும் கவுன்சலிங் மூலம் உளவியல் ரீதியான ஆதரவையும் தருகிறோம்.

குழந்தை வளர்ப்பில் அதற்கே உரிய செலவு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும், அதனால் குழந்தையோடு உங்கள் குடும்ப வாழ்க்கை குறைந்த செலவில் அமைய நாங்கள் உதவுகிறோம்.

உங்கள் உடல்நிலை மற்றும் நீங்கள் பெறப் போகும் சிகிச்சை குறித்து புரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. அதற்கு, பழநி பாலாஜி மையம் உறுதுணையாக இருந்து உதவுகிறது.

"மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் தான் என் முன்னேற்றத்திற்கு காரணம்".

Dr.D.செந்தாமரைச் செல்வி

எங்கள் நிறுவனரைப் பற்றி

Dr.D. செந்தாமரைச் செல்வி, M.B.B.S., M.D., D.G.O., D G E S (Germany) கருத்தரிப்புச் சிகிச்சை, மகளிர் நலம் மற்றும் மகப்பேறு நிபுணர். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு நிபுணராக பணியாற்றிய போது, கருவுற முடியாத பல குடும்பங்களுக்கு Dr.D.செந்தாமரைச் செல்வி அறிமுகமானார்.

அந்தக் குடும்பங்களின் கஷ்டங்களை கண்கூடாக பார்த்த இவர், சமீபகாலமாக அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்சனையால் வருந்துபவர்களுக்கு உதவுவதையே தன் லட்சியமாக கொண்டார்.

அதற்காக 2000ம் ஆண்டில் Dr.D.செந்தாமரைச் செல்வி, KIEL University, Germany யில் Assisted Reproductive Technology (ART) மற்றும் In Vitro Fertilization (IVF) ஆகிய சிகிச்சை முறைகளை Infertility Training course ல் பயிற்சி பெற்றார்.

குழந்தையின்மை பிரச்சனையால் தவிக்கும் தன் தாய்நாட்டு மக்களுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இந்தியா திரும்பிய Dr.D.செந்தாமரைச் செல்வி, பழநி பாலாஜி கருத்தரிப்பு மையத்தை தொடங்கினார்.

கர்ப்பம் தரித்தலுக்கு இடையூறாக இருக்கும் ரிக்கரன்ட் ப்ரெக்னென்ஸி லாஸ் (Recurrent Pregnancy Loss), என்டோ-மெட்ரியோஸிஸ் (Endometriosis), மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை (Menstrual Disorders), ஃபைப்ராய்ட்ஸ் (Fibroids) மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பிரச்சனைகளோடு வந்த நபர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து, மூன்று தலைமுறைகளின் மகப்பேறுகளை இவர் கண்டுள்ளார்.

பதினான்கு வருடம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அனுபவத்தோடு, Dr. D.செந்தாமரைச் செல்வி, தன் சொந்த மருத்துவமனையான D.S.Hospitals Pvt.Ltd ஐ 1993 ல் துவங்கி தன் பணியை தொடங்கினார். அது தான், அப்பகுதியில் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான மக்களுடைய மனதைத் தொட்ட நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் M.B.B.S மற்றும் D.G.O பட்டமும், USA வின் Texilla American University யில் M.D. பட்டமும் பெற்ற Dr.D.செந்தாமரைச் செல்வி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் குழந்தையின்மை பிரச்சனையால் பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான தம்பதிகளுக்கு, ஒரு குழந்தை வேண்டும் என்ற அவர்களுடைய கனவை நனவாக்கியிருக்கிறார்.

குழந்தையின்மை பிரச்சனையோடு வரும் தம்பதிகளை Dr.D.செந்தாமரைச் செல்வி, தனி அக்கறையோடு கவனித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதையே மூச்சாக கொண்டுள்ளார், அது தான் பழநி பாலாஜி கருத்தரிப்பு மையத்தை தனித்துவம் கொண்டதாக ஆக்கியிருக்கிறது.

பத்திரிக்கைச் செய்தி

சான்றுகள்

சாதனைகள்

எங்கள் வெற்றிகள்

தனி நபர் ஒவ்வொருவருக்கும் பிரச்சனை வெவ்வேறாக இருப்பதால் எங்கள் வெற்றியின் விகிதத்தை எண்களில் சுருக்கி விட முடியாது. IVF சிகிச்சையின் வெற்றி தனி நபர் வயது மற்றும் குறைபாட்டின் தீவிரத்தை பொறுத்தது. எப்படி இருப்பினும், குறைபாட்டிற்கான தீர்வை உறுதிபடுத்தும் விதமாக, சர்வதேச தரமுள்ள சிகிச்சைகளை நாங்கள் தொடர்ந்து வழங்குகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளோடு வரும் மக்களுக்கு, குழந்தைச் செல்வத்தோடு வாழ்க்கை தொடர நாங்கள் உதவியிருக்கிறோம்:

விருதுகள் & சான்றுகள்

 • பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தின் ஆயிரக்கணக்கான வெற்றிக் கதைகள், கிரீடத்தின் ரத்தினங்களாக மின்னுகிறது.
 • மருத்துவத்துறை நிறுவனங்களின் தரச் சான்றிதழான ISO 9001-2008 Governor Award 2016 ஐ நாங்கள் பெற்றிருக்கிறோம்.
 • Governor Award – மருத்துவ மாமணி, Dr. D.செந்தாமரைச் செல்வி அவர்கள் துறை சார்ந்த பேச்சாளராக பல இடங்களுக்கு சென்றிருக்கிறார் மேலும் கருத்தரித்தல் சிகிச்சையில் அவரின் சாதனைகளுக்காக பல விருதுகளை பெற்றிருக்கிறார்.