அடித்தளங்கள்

குழந்தையின்மைக்கு தகுந்த காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் என்று நாம் பேசுவதற்கு முன், உங்கள் இனப்பெருக்க மண்டலம் எதைக் கொண்டது, அது என்ன செய்கிறது என்பதைப் பற்றி புரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.

ஒரு பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தை Internal Structures & External Structures என்று இரு பிரிவாக பிரிக்கலாம்.

பெண்களில், Internal Structures எதுவென்றால்

 • Ovaries (அண்டம்)
 • Fallopian Tubes (ஃபலோப்பியன் குழாய்கள்)
 • Uterus (கர்பப்பை)
 • Vagina (யோனி)

அடுத்து External Structures எதுவென்றால்

 • Labia Majora (இதழ்)
 • Labia Minora (சிறிய உதடு)
 • Clitoris (க்ளைட்டோரிஸ்)
 • Urethral Opening (சிறுநீர்க் குழாய் திறப்பு)
 • Vaginal Opening (யோனி திறப்பு)

இந்த ஒவ்வொரு Structures ம், இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதில் மிகவும் முக்கியமானது Internal Structures.

அண்டம் (Ovary)

ஓவரி தான் உங்கள் முட்டைகளை உருவாக்கி தருகிறது. பெண்கள் பிறக்கும் போதே அவர்களின் லைஃப் டைமிற்கு தேவையான குறிப்பிட்ட அளவிலான முதிராத முட்டைகள் அல்லது ஃபாலிக்கிள்ஸ்ஸோடு தான் பிறக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் ஒருசில ஃபாலிக்கிள்ஸ் வளரும், ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தான் முதிர்ச்சியடைந்து முட்டையாக வெளிவருகிறது. ஃபாலிகிள்லில் இருந்து தான் முட்டை அல்லது சினை முட்டை வெளியாகிறது, Corpus Luteum என்று மருத்துவர்களால் சொல்லப்படும், பொதிந்த வடிவில் இருக்கும் மிச்ச முட்டைகள் ஓவரியிலேயே இருக்கும். இப்போது, ஃபாலிகிள் வளரும் போது முதல் பருவம் பதினான்கு நாட்கள் தொடரும், இது Follicular Phase என்றழைக்கப்படுகிறது. பதினான்காம் நாளில், முட்டை வெளியாகும் போது, அதைத் தான் Ovulation என்கிறோம். Corpus Luteum ம்மை தன்னகத்தே வைத்திருக்கும், இந்த சுழற்சியின் மீத நாட்களை Luteal Phase என்கிறோம்.

கர்ப்பப்பை (Uterus)

உங்கள் கருப்பை அல்லது கர்ப்பப்பைக்கு, கருத்தரித்தல், வளர்த்தல் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற கடுமையான சவாலான பொறுப்புகள் இருக்கிறது. இந்த நிகழ்வின் போது, கருவிலிருக்கும் குழந்தைக்கு பஞ்சு மெத்தை மென்மையும், ரத்தம் மூலம் நிறைய ஊட்டச்சத்தும், சரிவிகிதத்தில் ஹார்மோன்களும் தேவைப்படுகிறது. உங்கள் கர்ப்பப்பை ஒவ்வொரு மாதமும் ஒரு குழந்தையை எதிர்பார்க்கும், கருவறையில் அழகான இந்த மெத்தையை உருவாக்கும். ஒருவேளை வளர்ப்பதற்கு கருத்தரிக்கவில்லை என்றால் கர்ப்பப்பை உருவாக்கிய மெத்தைப் போன்ற அந்த அமைப்பை வெளியேற்றிவிடும், அதைத் தான் மாதவிடாய் என்கிறோம். ”ஏமாற்றமடைந்த கர்பப்பையின் ரத்தக் கண்ணீர் தான் – மாதவிடாய்.”

ஃபலோப்பியன் குழாய்கள் (Fallopian Tubes)

சினைமுட்டை ஓவரியிலிருந்து கர்பப்பை க்கு பயணிக்க உதவும் ஒரு பாதை தான் ஃபலோப்பியன் டியுப். இந்த டியுப்களில் மிக நுண்ணிய ரோமங்கள் போன்ற அமைப்பு இருக்கும், அது தான் முட்டை முன்னேறி போக உதவியாய் இருக்கிறது. ஃபாலோப்பியன் டியுப்களில் தான் கருத்தரித்தல் – அதாவது சினைமுட்டையும், விந்தணுவும் ஒன்றிணைவது நடக்கிறது.

உங்களுக்கு தெரியுமா?

Medical to English Translator
English Medical Terminology (மருத்துவ வார்த்தை பிரயோகங்கள்)
அண்டம் OO என்ற எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள் ஓவரியை குறிக்கிறது oocyte = ஓவரியில் இருந்து, முட்டையாக மாறும் ஒரு செல்.oophorectomy = ஓவரியை அகற்றுவது oocyst = ஓவரியிலிருக்கும் ஒரு (நீர்க்) கட்டி.
ஃபலோப்பியன் டியூப்

Salpin எனும் வார்த்தையோடு தொடங்கும் வார்த்தைகள் ஃபலோப்பியன் டியூப்ஸை குறிக்கிறது.

 • Salpingitis = ஃபலோப்பியன் டியூபில் வீக்கம்.
 • Salpingectomy = ஃபலோப்பியன் டியூப்பை அகற்றுவது
 • Salpingocyesis = ஃபலோப்பியன் குழாயிலேயே கருத்தரிப்பு ஏற்படுவது, இது ஒருவகை ectopic pregnancy(இடம்மாறிய கருத்தரிப்பு)
கர்ப்பப்பை

இது மூன்று அடுக்குகளால் ஆனது

 • Endometrium – உள்ளடுக்கு (குஷன் போன்ற அமைப்பு – இது தான் மாதவிடாயின் போது பிரிந்து ரத்தப் போக்காக வடிகிறது)
 • Myometrium – தசை அடுக்கு
 • Perimetrium – வெளி அடுக்கு

ஆண்களின் இனப்பெருக்க மண்டலம்

ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் பைப்கள் மற்றும் குழாய்கள் அதிகளவில் இருந்தாலும் கூட அதில் சிக்கல் மிகக் குறைந்த அளவே இருக்கிறது.

ஆண்களின் இனப்பெருக்க அமைப்புகளில் முக்கியமானவை

 • பீனிஸ் (ஆண்குறி)
 • ஸ்க்ரோட்டம் (விதைப்பை)
 • டெஸ்டிஸ் (விரைகள்)

ஆண்களின் இனப்பெருக்க உற்பத்தி, சேமிப்பு மற்றும் விரைகளிலிருந்து ஆண்குறிக்கு விந்தணுவை அனுப்பும் வேலைகளுக்கு உதவும் அமைப்புகள் (or சப்போர்டிங் ஸ்டிரக்சர்ஸ்) இருக்கிறது. இந்த உதவும் அமைப்புகள் (or சப்போர்டிங் ஸ்டிரக்சர்ஸ்) எவையென்றால்:

 1. Epididymis (விந்து நாளத்திரள்)
 2. Spermatic Cords, Vas Deferens (or Ductus Deferents) (ஸ்பெர்மேட்டிக் கார்டு, வாஸ் டிஃபரன்ஸ் or டக்டஸ் டிஃபரன்ஸ்)
 3. Seminal Vesicles (செமைனல் வெசைக்கிள்)
 4. Ejaculatory Duct and Urethra (விந்து பீச்சுக்குழல் & சிறுநீர்வழி)
 5. Prostate (ப்ராஸ்டேட்)

ஆண் இனப்பெருக்க மண்டலத்தின் மிக முக்கிய உறுப்புகள் விரைகள். விரைகள் தான் விந்து மற்றும் டெஸ்டோஸ்ட்ரான் உற்பத்திக்கு பொறுப்பாக இருக்கிறது. விந்து ஆரோக்கியமாக இருக்க, மனித உடல் வெப்பத்தை விட குளுமையான டெம்ப்பரேச்சர் (வெப்பநிலை) தேவைப்படும் காரணத்தால், விரைகள் உடலை விட்டு சற்று ஒதுங்கி, பை போன்ற அமைப்பான விதைப்பையில் (Scrotum ல்) இருக்கிறது. விரைகள் விந்து உற்பத்தி செய்வதற்கு தகுந்த டெம்ப்பரேச்சரை (வெப்பநிலையை) உறுதி செய்ய, விரைப்பை உடலுக்கும் விரைகளுக்குமான தூரத்தை மாற்றியமைக்கிறது.

விரைகளில் விந்து உற்பத்தியான பிறகு, அது விதைப்பையில் விரைகளுக்கு அருகிலிருக்கும் Epididymis (விந்து நாளத்திரள்) எனும் நீளமான சுருள் குழாயில் சேமிக்கப்படுகிறது. விந்துக்கள் ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் மற்ற பாகங்களுக்கு செல்வதற்கு முன் அது முதிர்வடைவதற்கு,Epididymis (விந்து நாளத்திரள்) ன் நீளம் உதவியாக இருக்கிறது.

Epididymis (விந்து நாளத்திரள்), வாஸ் டிஃபரன்ஸ் or டக்டஸ் டிஃபரன்ஸ் என்றழைக்கப்படும் ஒரு குழாயோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழாய் தான் விந்தணுக்களை விரைகளின் பகுதியிலிருந்து, அடிவயிற்றுப் பகுதிக்கும் பிறகு விந்து வெளியாவதற்காக ஆண் குறிக்கும் அனுப்பி வைக்கிறது. இந்த குழாயின் உட்சுவர்கள் மென்மையான தசைகளால் ஆனது, அது தான் விந்தணுக்கள் அதற்குரிய பாதையில் நகர்ந்து செல்ல உதவுகிறது. இனப்பெருக்க கட்டுப்பாடு முறையான Vasectomy பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். விந்தணுக்கள் விரைகளிலிருந்து ஆண்குறிக்கு செல்வதை தடுப்பதற்காக, வாஸ் டிஃபரன்ஸ் எனும் இந்த குழாயின் ஒரு பகுதியை மருத்துவர்கள் வெட்டி விடுகிறார்கள்.

இந்த வாஸ் டிஃபரன்ஸ் சிறுநீர்ப் பைக்கு பின்னாலும், மலக்குடலுக்கு முன்னாலும் வளைந்து சுருண்டு இருக்கும். இந்த பகுதியில் Seminal Vesicle எனும் ஒரு சுரப்பி இருக்கிறது, அது உற்பத்தி செய்யும் திரவங்களில் ஒருசிலதை விந்துக்களில் காணலாம். இந்த திரவம் தான் விந்தணுக்களை உயிரோடு வைக்க முக்கியமானது. இந்த திரவம் புரதங்கள் மற்றும் கோந்து போன்றவையால் உருவானது, இது தான் யோனிலிருக்கும் அமிலச் சூழலிலும் விந்தணு உயிரோடு இருக்க தகுந்த சூழலை உருவாக்கி தருகிறது. இந்த திரவத்தில் ஃப்ரக்டோஸும் இருக்கிறது, இது விந்தணுவிற்கு ஊட்டச்சத்து தருகிறது அப்போது தான் விந்தணுக்களுக்கு ஒரு சினை முட்டையை கருவுற வைக்கும் ஆற்றல் கிடைக்கும்.

Seminal Vesicle, Ejaculatory Duct டோடு (or விந்து பீச்சுக்குழலோடு) இணைந்து இருக்கிறது, அடிப்படையில் ஒரு குழாயான இது சிறுநீர்க் குழாயோடு இணைந்து இருக்கிறது. இந்த ejaculatory duct (or விந்து பீச்சுக்குழல்), விந்துவிலிருக்கும் அதிகளவு திரவத்தை உற்பத்தி செய்யும் ப்ராஸ்டேட் எனும் சுரப்பி வழியாக செல்கிறது. இந்த திரவத்தில், விந்தணுக்களுக்கு ஊட்டச்சத்து தரும் என்ஸைம்ஸ், கெமிக்கல்ஸ் மற்றும் ப்ரோட்டீன்ஸ் இருக்கிறது, மேலும் அது பால் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.

இதற்கு பிறகு, விந்து Urethra (சிறுநீர்க்குழாய்)க்கு செல்கிறது, உடலில் இருந்து சிறுநீர் மற்றும் விந்துவை, ஆண்குறி வழியாக வெளியேற்றும் ஒரு குழாய் தான் இந்த Urethra. சிறுநீர் அமிலத்தன்மையும், விந்து காரத் தன்மையும் கொண்டதாக இருப்பதால், ப்ராஸ்டேட்டிற்கு அருகிலிருக்கும் மற்ற சுரப்பிகளிலிருந்து வெளிவரும் பிசுபிசுப்பான Mucus, Ejaculation க்கு முன்பாக விந்து கடந்து செல்லும் பாதையை Neutralize செய்ய உதவுகிறது.

உங்களுக்கு தெரியுமா?

Medical to English Translator
English Medical Terminology
Testes / testicles விரைகள் / விதைகள்

Orch- orchid- or test எனும் வார்த்தைகளோடு தொடங்கும் வார்த்தைகள் விரைகளை குறிக்கிறது

 • Orchitis = விரைகளில் வீக்கம்
 • Orchiectomy = விரைகளை அகற்றுவது
 • Orchioplasty = விரைகளை அறுவை சிகிச்சை மூலம் சீரமைப்பது.
Penis

Balan எனும் வார்த்தையோடு தொடங்கும் வார்த்தைகள் ஆண்குறியை குறிக்கிறது.

 • Balanitis = ஆண்குறியில் வீக்கம்.
 • Balanorrhea = ஆண்குறியில் அழற்சி ஏற்பட்டு கசிதல்.
 • Balanoplasty = ஆண்குறியின் நுனியை அறுவைசிகிச்சை மூலம் சீரமைப்பது.

பெண் இனப்பெருக்க மண்டலத்தின் ஹார்மோன்கள்:

பெண்களின் மாதவிடாய் சுழற்சியை என்டோக்ரைன் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக கருதலாம், ஏனென்றால் அது ஒரே CEO மற்றும் Vice President ன்னால் கட்டுப்படுத்தப்படுகிறது. சரி இப்போ என்டோக்ரைன் அனலாஜியை (or ஒப்புமை) பற்றி பார்க்கலாம்.

என்டோக்ரைன் சிஸ்டம் என்பது, CEO Madame Hypothalamus மற்றும் Vice President Ms. Pituitary ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஃபேக்டரியை போன்றது. இந்த ஃபேக்டரி பலவிதமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது, அதனால் இதில் பல skilled workers உதவியோடு பலதரப்பட்ட செயல்பாடுகள் நடக்கிறது. இந்த அனலாஜியில் (or இந்த ஒப்பீட்டில்) CEO மற்றும் Vice President அமர்ந்திருக்கும் மூளை தான் ”கார்ப்பரேட் ஆஃபிஸ்” ஸாக இருக்கிறது, இது இனப்பெருக்க மண்டலத்தின் வேலையாட்கள் இருக்கும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. இந்த தூரம் காரணமாக, எல்லா வேலையாட்களும் ஒத்திசைவோடு (or sync ஓடு) இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய கூடுதல் கம்யுனிகேஷன் கட்டாயமாக நடந்தாக வேண்டும். இந்த கம்யுனிகேஷன் மற்றும் கம்மேன்ட்ஸ், உடலுறுப்புக்களை இணைக்கும் சாலைகளான ரத்த நாளங்கள் வழியாக ஹார்மோன்கள் மூலம் நடைபெறுகிறது.

”இந்த பாலினத்துக்காக (or Gender க்காக) என்ன ஹார்மோன்களெல்லாம் உற்பத்தியாகிறதோ, அதை ரிலீஸ் செய்யுங்கள்” என்று CEO, Vice Presidentக்கு அனுப்பும் கட்டளையோடு (or கம்மேன்டோடு) தொடங்குகிறது இந்த செயல்பாடுகள். இந்த கட்டளையை (or கம்மேன்ட்டை) “Gonadotrophin (Gender Specific Hormone) Releasing Hormone” or “GnRH” என்கிறோம். Vice President Ms. Pituitary, Madame Hypothalamus ன் கட்டளையை ஏற்று அதை இனப்பெருக்க மண்டலத்திற்கு அனுப்ப இரண்டு வழிகளை தேர்வு செய்ய முடியும். அதன் வாய்ப்புகள் எவையென்றால் Follicle Stimulating Hormone மற்றும் Luteinizing Hormone. நாம் இந்த கதையை முதல் நாளிலிருந்து ஆரம்பிக்கிறோம் என்பதாலும், Follicle லிருக்கும் முட்டை முதிர்வடைவது தான் முதல் phase என்பதை முதலிலேயே நாம் குறிப்பிட்டதாலும், Ms. Pituitary FSH command ஐ தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. ஆனா ஓவரி எந்த Phase ல் இருக்கிறது என்பதை ஓவரி சொல்லாமல், Ms. Pituitary க்கு எப்படி தெரியும்?

ஓவரியில், ஃபாலிகிள்ஸ் முதிர்வடைய ஆரம்பிக்கும் பொழுது, அது குறைந்த அளவிலான ஈஸ்ட்ரஜென்னை உற்பத்தி செய்கிறது. அது மேலும் வளர வளர, ஃபாலிகிள் அதிகளவில் ஈஸ்ட்ரஜென்னை உற்பத்தி செய்கிறது. ஓவரியின் ஃபாலிகிள் வளர்ச்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை ஈஸ்ட்ரஜென் அளவை பயன்படுத்தி Vice President கண்டறிந்து கொள்கிறது. ஒருவேளை ஈஸ்ட்ரஜென் அளவு குறைவாக இருந்தால், ஃபாலிகிள் வளர்ச்சியை இன்னும் அதிகமாக தூண்ட, FSH ஐ கூடுதலாக அனுப்ப வேண்டும் என்பதை Ms. Pituitary தெரிந்து கொள்ளும். ஒருவேளை ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருந்தால், ஃபாலிகிள் வளர்ச்சி தூண்டலை நிறுத்தி கொண்டு, Ovulation க்கு கட்டளையிட வேண்டும் என்பது அதற்கு தெரியும். இந்த கட்டத்தில் தான் Ms. Pituitary, LH or Lutenizing hormone கட்டளைக்கு மாறுகிறது. இந்த கட்டளை ஓவரியிடம், நன்கு முதிர்வடைந்த ஃபாலிகிள்ளை தேர்வு செய்து, Ovulate ஆக வேண்டும் அல்லது முட்டையை வெளியேற்ற வேண்டும் என்று கூறுகிறது.

பொதிந்த வடிவில் ஓவரியிலேயே இருக்கும் மிச்ச முட்டை பகுதியான Corpus Luteumபற்றி இதற்கு முன் நாம் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அது உயிரற்ற ஃபாலிகிள்ளாக இருந்தாலும் கூட, ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் முக்கியமான வேலையை அது செய்கிறது. அந்த ஹார்மோன்கள் எவையென்றால் ஈஸ்ட்ரஜன், இன்ஹிபின் மற்றும் அதிகளவில் ப்ரஜஸ்டிரோன். ஹார்மோன்கள் தான் உடலின் மொழி என்பது நமக்கு தெரியும், அதனால் Corpus Luteum என்ன சொல்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

சரி முதலில், நன்கு பரிட்சயமாக தோன்றும் ஈஸ்ட்ரஜென் ஹார்மோன்னில் இருந்து ஆரம்பிக்கலாம். இது தான் ஒரு பெண்ணை பெண்ணாக ஆக்கும் மிக முக்கியமான ஹார்மோன் என்று பெரும்பாலான மக்களுக்கு தெரியும். உடல் முழுக்க பலவிதமான விளைவுகள் இருந்தாலும், கர்பப்பையில் குஷன் போன்ற Endometrium வளருவதற்கு ஈஸ்ட்ரஜன் தான் அதிக பங்களிக்கிறது, அது தான் பெண்களின் குறிப்பிட்ட குணாதிசயங்களை தக்க வைக்கவும், தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மற்ற செயல்பாடுகளையும் செய்கிறது.

இப்போது Inhibin பற்றி பார்க்கலாம். இது Inhibit (தடுப்பு) என்ற வார்த்தையைப் போலவே இருக்கிறதல்லவா? நம்புவீர்களோ இல்லையோ, இது சரியாக அதைத் தான் செய்கிறது. Inhibin, Ms.Pituitary யிடம் FSH command வெளியிடுவதை தடுக்க அல்லது நிறுத்திக் கொள்ள சொல்கிறது. ஏனென்றால் ஏற்கனவே ஒரு முட்டை வெளியாகிவிட்ட காரணத்தால், மேற்கொண்டு எந்த பாலிகிள்ஸையும் தூண்டுவதற்கான அவசியம் இல்லை.

Corpus Luteum ம்மால் உற்பத்தி செய்யப்படுகிற மிக முக்கியமான ஹார்மோன் தான் Progesterone, இது பல செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்த ஹார்மோன் என்ன சொல்கிறது என்பதை புரிந்து கொள்ள, இந்த வார்த்தை சற்று பிரித்து பார்க்கலாம். Gestation என்றால் கரு வளர்ச்சி என்று பொருள். Pro-Gestation Hormone or Progesterone, உங்கள் கர்ப்பப்பையில் குஷன் (மெத்தை) போன்ற அமைப்பை உருவாக்கி கருத்தரித்தலை தூண்டுகிறது. மேலும் இந்த மாதம் குழந்தை உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம், அதனால் அவசியம் இன்றி மேற்கொண்டு எந்த ஃபாலிக்கிள்ஸயும் தூண்ட வேண்டாம், அதனால் ”Pituitary க்கு கட்டளையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று உங்கள் CEO விற்கு அறிவுறுத்துகிறது.

அதனால் CEO GnRH commands வெளியிடுவதை நிறுத்துவிடுகிறது, அதன் விளைவாக VP, FSH or LH commands தருவதை நிறுத்திக் கொள்கிறது. தேவைப்படும் எல்லா ஹார்மோன்களும் Corpus Luteum மால் வெளியிடப்படுகிறது, இந்த மாதம் குழந்தை உருவாக எல்லா சூழல்களையும் உடல் மேற்கொள்கிறது.

சரி, எந்த கருத்தரிப்பும் நடக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம், அப்போது இது வழக்கமான மாதவிடாய் சுழற்சியாக இருக்கும். Corpus Luteum சிதைந்து, அது உற்பத்தி செய்த ஹார்மோன்களும் சேர்ந்து மறைகிறது. இது தான் CEO விடமிருந்து சென்ற Inhibition command ஐ அகற்றுகிறது, பிறகு CEO, VP க்கு GnRH command ஐ பிறப்பிக்க, VPஃபாலிகிள் வளர்ச்சி படலத்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கிறது, ஒரு புது சுழற்சி தொடங்குகிறது. இதன் விளைவாக ஹார்மோன்களின் அளவு குறைவதால், கர்ப்பப்பையில் குழந்தை தங்குவதற்கு தேவையான அந்த குஷன்னை (மெத்தையை) தக்க வைக்க முடியாமல் போகிறது. இதன் காரணமாக அந்த குஷன் (மெத்தை) கர்ப்பபையிலிருந்த உதிர்ந்து (or பிரிந்து) பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது.