IUI: INTRA-UTERINE INSEMINATION

IUI (INTRA-UTERINE INSEMINATION)என்றால் என்ன?

  • இயற்கை கருத்தரிப்பிற்கு மிகவும் நெருக்கமான சிகிச்சை முறை (or இயற்கை கருத்தரிப்பிற்கு இணையான சிகிச்சை முறை).

  • மருத்துவரால் நல்ல வீரியமான விந்தணு (or உயிரணு) கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படும்.

IUI சிகிச்சையை நீங்கள் எப்போது செய்வீர்கள்?

இயற்கை கருத்தரிப்பிற்கு சாதகமான காரணிகள் – அதாவது Ovulation, Good Tubal Patency மற்றும் Normal Semen Parameters என்று எல்லாம் சரியாக இருந்தும், கருத்தரிப்பு நிகழாத போது, செய்யப்படும் முதற்படி செயல்முறை தான் இந்த IUI.

IUI Procedure என்றால் என்ன?

  1. Super-Ovulation: இயற்கையாய் நிகழும் மாதவிடாய் சுழற்சியில், ஒரே ஒரு கருமுட்டை தான் உருவாகும். வலது மற்றும் இடது புறத்தில் இருக்கும் கருமுட்டை பைகள் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் ஒரு கருமுட்டையை உருவாக்கும். Super-Ovulation கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக கூடுதலாக ஒரு தரமான கருமுட்டையை உருவாக்கும். அதாவது நீங்கள் கர்ப்பமடைவதற்கான நல்ல வாய்ப்பு அமையும்.
  2. விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு, கருவூட்டலுக்காக சிறப்பான முறையில் கழுவப்படுகிறது. நல்ல தரமான உயிரணு (or விந்தணு) தேர்வு செய்யப்பட்டு, பின் உட்செலுத்தப்படுவதற்காக (or இன்ஜெக்ட் செய்யப்படுவதற்காக) கணிசமான எண்ணிக்கையில் (or அதிக எண்ணிக்கையில்) சேகரிக்கப்படுகிறது.
  3. பிறகு விந்தணுக்கள் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படுகிறது (or இன்ஜெக்ட் செய்யப்படுகிறது). இது வலியில்லாத, விரைவான செயல்முறை. விந்தணுக்கள் மிக மெல்லிய flexible catheter மூலம், கருப்பைவாய் (or Cervix) வழியாக செலுத்தப்படுகிறது (or இன்ஜெக்ட் செய்யப்படுகிறது).
img21

IVF: IN-VITRO FERTILIZATION

IVF என்றால் என்ன?

  • உடலுக்கு வெளியே கருத்தரித்தல். மருத்துவர்கள், IVF Lab ல் நல்ல வீரியமான விந்தணு மற்றும் நல்ல தரமான கருமுட்டைகளை இணைத்து வைப்பார்கள்

  • IVF என்பது, Assisted Reproductive Technology (ART) செயல்முறையின் அடிப்படையான ஒரு வடிவம்.

IVF முறையை நீங்கள் எப்போது செய்வீர்கள்?

கருத்தரிப்பு இயற்கையாக நிகழாத போது அல்லது குறிப்பிட்ட சில குறைபாடுகளால் நிகழாத போதும் , IUIமூலமும் நிகழாத போதுIVF பரிந்துரைக்கப்படுகிறது.

IVF செயல்முறை எவ்வாறானது?

  1. IVF தயாரிப்பு
    • ஒரு பெண்ணின் BMI ஐ (Body Mass Index or உடல் நிறை குறியீட்டெண்ணை) சீராக்குவது.
    • அந்த பெண்ணிற்கு ஹார்மோன் மதிப்பீடு செய்ய வேண்டும்.
    • Ovulation ஐ தூண்டுவதற்காக, BMI மற்றும் ஹார்மோன் மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டு அதற்கேற்ப, Ovarian Stimulation Protocol செய்யப்படுகிறது.
    • நல்ல தரமான கருமுட்டைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக Ovulation ஐ தூண்டும் மருந்துகளும் / இன்ஜெக்ஷன்ஸும் கொடுக்கப்படுகிறது.
  1. Controlled Ovarian Stimulation: (கட்டுப்படுத்தப்பட்ட கருமுட்டை தூண்டல்).
    முறையான, தனி நபருக்கேற்ப செய்யப்படும் Ovarian Stimulation Protocol மூலம் கருமுட்டை உற்பத்தி தூண்டப்படுகிறது. கணிசமான எண்ணிக்கையில் நல்ல தரமான முட்டைகளை உருவாக்குவது தான் இதன் குறிக்கோள்.
  2. Ovum Pick-Up எனும் செயல்முறை கொண்டு அந்த பெண்ணிடமிருந்து Oocyte (or கருமுட்டைக் குழியம்) எடுக்கப்படுகிறது, இதை செய்ய குறுகியகால General Anesthesia (or பொதுமயக்க மருந்து) கொடுக்கப்படுகிறது.
  3. நல்ல வீரியமான விந்தணுக்கள் தேர்வு செய்யப்பட்டு, கணிசமான எண்ணிக்கையில் அவை சேகரிக்கப்படுகிறது.
  4. அந்த விந்தணுவும், கருமுட்டைகளும் உடனடியாக IVF lab ல் கொடுக்கப்படுகிறது. அந்த Lab ல் பெண்ணின் Fallopian tubal fluid க்கு இணையான திரவமுள்ள Fertilisation Petri dish ல் கருமுட்டைகளும், விந்தணுவும் சேர்க்கப்படுகிறது. இதில் விந்தணு தானாக கருமுட்டையுடன் இணைந்து கருவுருதலைச் செய்கிறது.
  5. கருவுற்ற அந்த முட்டை ஒரு (உயிர்க்) கருவாக (or Embryo வாக) உருவாகிறது. மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு பிறகு, அந்த (உயிர்க்) கரு நேரடியாக அப்பெண்ணின் கர்ப்பப்பைக்குள் மாற்றப்படுகிறது. இதைத்தான் Embryo Transfer என்று குறிப்பிடுவார்கள்.

IVF LAB:

  • IVF Lab என்பது, கருமுட்டை, விந்தணு மற்றும் கருவுற்ற முட்டைகள் என உயிருள்ள நுண்ணியிரிகள் கையாளப்படும், தரக்கட்டுப்பாடுள்ள Bio-laboratory.
  • இது மிக கவனத்தோடு கையாளப்பட வேண்டிய நுணுக்கமான வேலை, ஏனென்றால் இந்த செயல்முறை முடியும் வரை எல்லாமும் உயிரோடு இருக்க வேண்டும்.
  • மேலும் அவைகளுக்கான தரமும், நிலைத்தன்மையும் உறுதி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

ICSI: INTRACYTOPLASMIC SPERM INJECTION

ICSI என்றால் என்ன?

  • இது IVF முறையின் மேம்பட்ட வடிவம், இதில் Micromanipulator syringe மூலமாக விந்தணு நேரடியாக கருமுட்டைக்குள் செலுத்தப்படுகிறது (or Inject செய்யப்படுகிறது).
  • பிரத்யேகமாக தேர்வு செய்யப்பட்ட விந்தணு மற்றும் தரமான கருமுட்டைகளை பயன்படுத்தி, உடலுக்கு வெளியே கருத்தரிப்பு செய்யப்படுகிறது.
  • இந்த ICSI, Assisted Reproductive Technology (ART) செயல்முறையில் ஒரு வகை, குறிப்பாக வீரியமற்ற விந்தணுக்கள் உள்ளவர்களுக்காக செய்யப்படும் வகை.

ICSI முறையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்?

ICSI Procedure என்றால் என்ன?

  1. ICSI தயாரிப்பு :
    • ஒரு பெண்ணின் BMI(Body Mass Index or உடல் நிறை குறியீட்டெண்ணை) சீராக்குவது.
    • அந்த பெண்ணிற்கு ஹார்மோன் மதிப்பீடு செய்ய வேண்டும்.
    • அந்த பெண்ணிற்கு Ovulation ஐ தூண்டுவதற்காக, BMI மற்றும் ஹார்மோன் மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டு அதற்கேற்ப, Ovarian Stimulation Protocol செய்யப்படுகிறது.
    • நல்ல தரமான கருமுட்டைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக Ovulation ஐ தூண்டும் மருந்துகளும் / இன்ஜெக்ஷன்ஸும் கொடுக்கப்படுகிறது.
  1. Controlled Ovarian Stimulation : (கட்டுப்படுத்தப்பட்ட கருமுட்டை தூண்டல்) முறையான, தனி நபருக்கேற்ப செய்யப்படும் Ovarian Stimulation Protocol மூலம் கருமுட்டை உற்பத்தி தூண்டப்படுகிறது. கணிசமான எண்ணிக்கையில் நல்ல தரமான முட்டைகளை உருவாக்குது தான் இதன் குறிக்கோள்.
  2. Ovum Pick-Up எனும் செயல்முறை கொண்டு அந்த பெண்ணிடமிருந்து Oocyte (or கருமுட்டைக் குழியம்) எடுக்கப்படுகிறது, இதை செய்ய குறுகிய கால General Anesthesia கொடுக்கப்படுகிறது.
  3. விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்து, கழுவப்படுகிறது. நல்ல வீரியமான விந்தணுக்கள் ICSI க்காக தேர்வு செய்யப்படுகிறது.
  4. தேர்வு செய்யப்பட்ட விந்தணுக்கள், Micromanipulator syringe மூலமாக நேரடியாக கருமுட்டைக்குள் செலுத்தப்பட்டு (or Inject செய்யப்பட்டு), கருத்தரிப்பு செய்யப்படுகிறது.
  5. கருவுற்ற அந்த முட்டை ஒரு (உயிர்க்) கருவாக (or Embryo வாக) உருவாகிறது. மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு பிறகு, அந்த (உயிர்க்) கரு நேரடியாக அப்பெண்ணின் கர்ப்பப்பைக்குள் மாற்றப்படுகிறது.

IMSI: Intra-cytoplasmic Morphologically Selected Sperm Injection

IMSIஎன்றால் என்ன?

IMSI முறையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்?

IMSI Procedure என்றால் என்ன?

  1. ICSI முறையைப் போலவே தான் இதிலும் கருமுட்டை (or Ovum) தயாரிக்கப்படுகிறது.
  2. விந்து சேகரிக்கப்பட்டு, அறுநூறு மடங்கு அளவிற்கு உருப்பெருக்கம் (or magnification) செய்து சோதிக்கப்படுகிறது. உரு அமைப்பில் வீரியமான விந்தணுக்கள் தேர்வு செய்யப்பட்டு கழுவப்படுகிறது.
  3. தேர்வு செய்யப்பட்ட விந்தணுக்கள், ஒரு Micromanipular Syringe மூலமாக கருமுட்டைக்குள் செலுத்தப்பட்டு (or Inject செய்யப்பட்டு), கருத்தரிப்பு செய்யப்படுகிறது.
  4. கருவுற்ற அந்த முட்டை ஒரு (உயிர்க்) கருவாக (or Embryo வாக) உருவாகிறது. மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு பிறகு, அந்த (உயிர்க்) கரு நேரடியாக அப்பெண்ணின் கர்ப்பப்பைக்குள் மாற்றப்படுகிறது.

PESA: Percutaneous Epididymal Sperm Aspiration

PESA என்றால் என்ன?

Epididymis லிருந்து (விந்துவை சேகரித்து, கடத்துவதற்கு உதவும் விரையோடு இணைந்திருக்கும் ஒரு குழாயிலிருந்து) நேரடியாக விந்தணுக்களை சேகரிக்கும் ஒரு செய்முறை தான் PESA.

PESA வை நீங்கள் எப்போது செய்வீர்கள்?

  • தங்களுடைய விந்துநீரில் விந்தணுக்கள் இல்லாத (azoospermia) அல்லது விந்து உற்பத்தியில் சிரமம் இருக்கிற ஆண்களுக்கு, PESA செய்யப்படுகிறது.
  • பொதுவாக Obstructive Azoospermia, அதாவது விந்து வெளிவருவதற்கு ஏதோ ஒன்று தடையாக இருக்கும் நபர்களுக்கு இது செய்யப்படுகிறது.
  • (விந்து உற்பத்தியே இல்லாத நிலையைத் தான் True Azoospermia என்கிறோம். இதற்கு தேவை Donor Sperm or விந்து தானம்)

PESA procedure எவ்வாறானது?

  1. ஒரு ஆணின் விரையை மரத்து போகச் செய்ய Local Anesthesia கொடுக்கப்படுகிறது. பின் ஒரு மெல்லிய ஊசியை Epididymis ல் செலுத்தி, விந்து உறிஞ்சியெடுக்கப்படுகிறது.
  2. சேகரிக்கப்பட்ட விந்து உடனடியாக ICSL க்கு கொடுக்கப்படுகிறது.

TESA: Testicular Epididymal Sperm Aspiration

TESA என்றால் என்ன?

விரைகளிலிருந்து (or டெஸ்டிஸிலிருந்து) நேரடியாக விந்துவை எடுக்க பயன்-படுத்தப்படும் முறை தான் இந்த TESA.

TESA வை நீங்கள் எப்போது செய்வீர்கள்?

  • தங்களுடைய விந்துவில் விந்தணுக்கள் இல்லாத (azoospermia) அல்லது விந்து உற்பத்தியில் சிரமம் இருக்கிற ஆண்களுக்கு, TESAசெய்யப்படுகிறது.
  • பொதுவாக Obstructive Azoospermia, அதாவது விந்து வெளிவருவதற்கு ஏதோ ஒன்று தடையாக இருக்கும் நபர்களுக்கு இது செய்யப்படுகிறது.
  • (விந்து உற்பத்தியே இல்லாத நிலையைத் தான்True Azoospermia என்கிறோம். இதற்கு தேவை Donor Sperm or விந்து தானம்)

    TESA procedure எவ்வாறானது?

  1. ஒரு ஆணின் விரையை மரத்து போகச் செய்ய Local Anesthesia கொடுக்கப்படுகிறது. பின் ஒரு மெல்லிய ஊசியை நேரடியாக விரைகளில் செலுத்தி, விந்து உறிஞ்சியெடுக்கப்படுகிறது.
  2. சேகரிக்கப்பட்ட விந்து உடனடியாக ICSI க்கு கொடுக்கப்படுகிறது.

TESA மற்றும் PESAமுறையிலிருக்கும் வித்தியாசம் தான் என்ன?

Laparoscopy

Laparoscopy என்றால் என்ன?

  • அடிவயிற்றுப் பகுதி அல்லது பெண்களின் இடுப்புப் பகுதியிலிருக்கும் உறுப்புகளை பார்ப்பதற்காக, அதிக திறனுள்ள கேமெராக்கள் பொறுத்தப்பட்ட மெல்லிய lighted cables பயன்படுத்தப்படும் வழக்கமான முறை தான் Laparoscopy.
  • சிறிய துளை மட்டுமே போடப்பட்டு, பகல் பொழுது மட்டும் மருத்துவமனையில் இருந்தால் போதும் என்றளவுக்கு இலகுவான ஒரு செய்முறை.

Laparoscopy ஏன் செய்யப்படுகிறது?

  • பரிசோதிக்க மற்றும் சிகிச்சைக்காகவும் இந்த Laparoscopy பயன்படுத்தப்படுகிறது.
  • உடலுக்குள் ஏதேனும் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா, ஒட்டிக்கொண்டிருக்கிறதா அல்லது கர்பப்பை இயல்பாக தெரிகிறதா என்பதை பார்க்க Diagnostic Laparoscopy செய்யப்படுகிறது.
  • ஒருவேளை ஏதேனும் பிரச்சனை கண்டறியப்பட்டால், உடனடியாக Surgical Laparoscopy கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

Laparoscopy அறுவை சிகிச்சைகள்:

  • PCOD க்கான Laparoscopic Ovarian Drilling (LOD)
  • கருமுட்டை பை நீர்க்கட்டியை அகற்றுவதற்காக Simple Ovarian Cystectomy
  • சாக்லேட் நீர்க்கட்டியை அகற்றுவதற்காக Chocolate Cystectomy
  • ஒட்டிக்கொண்ட குடல், கொழுப்பு பகுதி, உள் உறுப்புகளை பிரிப்பதற்காக Adhesiolysis
  • கர்ப்பப்பையில் myoma கட்டியை அகற்றுவதற்காக Myomectomy.

Laparoscopy எவ்வாறு செய்யப்படுகிறது?

  1. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பகுதியை மரத்து போகச் செய்ய General Anesthesiaகொடுக்கப்படுகிறது.
  2. கேமரா மற்றும் லைட் கொண்டுள்ள குழாய்களை உட்செலுத்த சிறிய கீறல் போடப்படும்.
  3. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, போடப்பட்ட கீறலை மூட, தையல் போடப்படும்

Hysteroscopy

Hysteroscopy என்றால் என்ன?

  • கர்ப்பப்பை மற்றும் கருப்பை வாயினை மருத்துவர் சோதிக்க, மெல்லிய லைட் கேபிள் மற்றும் உயர் திறனுள்ள கேமரா பொருத்தப்பட்ட குழாயை பயன்படுத்தும் முறை தான் இந்த Hysteroscopy.

  • இந்த முறை யோனி வழியாக செய்யப்படுகிறது.

    Hysteroscopy எவ்வாறு செய்யப்படுகிறது?

  1. மயக்க மருந்து அவசியப்படுமா இல்லையா என்பதை பொருத்து, அந்த பகுதியை மறத்து போகச் செய்ய மயக்கமருந்து கொடுக்கப்படுகிறது.
  2. ஒரு Hysteroscope (cable-like camera) ஐ யோனி வழியாக, கர்பப்பை வாய் கடந்து, கர்பப்பைக்குள் செலுத்துவார்கள்.
  3. பரிசோதனைக்கு தேவைப்படும் படங்களை சேகரிப்பார்கள். ஒருவேளை Biopsy தேவைப்படுமானால், குறிப்பிட்ட அந்த tissue வை (or சவ்வை) எடுப்பார்கள்

Testicular Biopsy

Testicular Biopsy என்றால் என்ன?

Biopsy சோதனைக்காக உங்கள் விரையிலிருந்து tissue(or சவ்வு) மாதிரி எடுக்கப்பட்டால், அதற்கு பெயர் தான் Testicular biopsy.

Testicular Biopsy ஏன் செய்யப்படுகிறது?

விந்து உற்பத்தி இல்லாமல் போனதற்கான (or Azoospermiaக்கான) காரணத்தை கண்டறியவும், அது உண்மையா அல்லது ஏதேனும் தடையிருக்கிறதா (True or Obstructive) என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த Testicular Biopsy செய்யப்படுகிறது.

    Testicular Biopsyசெயல்முறை (or Procedure) எவ்வாறானது?

  1. அந்த பகுதியை மரத்து போகச் செய்ய Local Anesthesia கொடுக்கப்படுகிறது.
  2. விரையின் தோல் வழியாக சிறிய கீறல் போடப்படும்.
  3. ஒரு சிறு துண்டு Testicular tissue வெட்டியெடுக்கப்படும். வெட்டியெடுக்கப்பட்ட டிஷ்யுவில் விந்து இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும். ஒருவேளை அதில் விந்து இருந்தால், அது obstructive azoospermia என்று கருதப்படும், ஒருவேளை விந்து இல்லையென்றால், அது True azoospermia வாகும்.
  4. விரையில் போடப்பட்ட கீறலை மூட ஒரு தையலும், பின் தோலில் உள்ள கீறலை மூட ஒரு தையலும் போடப்படும். இது மிகவும் எளிய முறை தான்.